யேர்மனியில் மாவீரர்நாள் பல்லாயிரக்கணக்கான மக்கள் உணர்வுடன் பங்கேற்பு

தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் தம் இன்னுயிர்களை ஆகுதியாக்கிய மாவீரர்களை நினைவுகூர்ந்து அஞ்சலிசெலுத்தும் மாவீரர்நாள் நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை யேர்மனி எசன் நகரில் நடைபெற்றது.

பொதுச்சுடரினை அருட்தந்தை இமானுவல் அடிகளார் ஏற்றிவைக்க தேசியக்கொடியினை மாவீரரின் சகோதரர் ஏற்றிவைத்தார் இதனை அடுத்து விடுதலைப்புலிகளின் தலைமைச்செயலகத்தால் விடுக்கப்பட்ட மாவீரர்நாள் அறிக்கை திரையில் ஒளிபரப்பப்பட்டது.

இதனை அடுத்து பிரத்தியோகமாக அமைக்கப்பட்ட மாவீரர்துயிலுமில்லத்தில் ஈகைச்சுடர் ஏற்றப்பட்டது  ஈகைச்சுடரினை பிரிகேடியர்.தீபனின் சகோதரி திருமதி லோகநாதன் ஏற்றிவைத்ததைத் தொடர்ந்து துயிலுமில்லப்பாடல் ஒலிக்கப்பட்டது இதனை அடுத்து மக்கள் நீண்டவரிசையில் காத்திருந்து மலர்கொண்டு மாவீரர்களுக்கு தமது அஞ்சலிகளைச் செலுத்தினர்.

மக்கள் மலர்அஞ்சலி செலுத்திக்கொண்டிருக்க இசைநிகழ்வு மேடையில் நடைபெற்றுக்கொண்டிருந்தது இதனை அடுத்து கவியரங்கம் சிறப்புரை சிறப்புரையினை அருட்தந்தை இமானுவல் அடிகளார் நிகழ்தினர். மற்றும் தாயகமக்களின் அவலத்தை எடுத்துரைக்கும் நாட்டியநாடகம் என்பன இடம்பெற்றன. முள்ளிவாய்க்கால் மற்றும் காலம் தந்ததலைவா ஆகிய இறுவட்டுக்கள் வெளியிட்டு வைக்கப்பட்டன.

இந் நிகழ்வுகளின் 10 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் கலந்து கொண்டிருந்தனர் தாயகவிடுதலைப் போராடத்திற்கான தமது பங்களிப்புக்கள் தொடரும் என்ற உறுதிமொழியுடன் மக்கள் அனைவரும் மண்டபத்தில் இருந்து கலைந்து சென்றனர்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.