மாத்தளன் மருத்துவமனை சுற்றயல் உட்பட பல பகுதிகளில் இன்றும் எறிகணைத் தாக்குதல்: 57 தமிழர்கள் படுகொலை

mathalan_shell_attack_0303091முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுமாத்தளன் மருத்துவமனை சுற்றயல் உட்பட பல பகுதிகளிலும் சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதல்களில் 57 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 104 பேர் காயமடைந்துள்ளனர்.

பாதுகாப்பு வலயத்தில் உள்ள புதுமாத்தளன் மருத்துவமனையின் சுற்றயல் பகுதி மீது இன்று செவ்வாய்க்கிழமை காலை 5:15 தொடக்கம் பிற்பகல் வரை சிறிலங்கா படையினர் ஆட்லெறி எறிகணை, பல்குழல் வெடிகணை, மோட்டார் மற்றும் பீரங்கித் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.

இதில் 13 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 58 பேர் காயமடைந்துள்ளனர்.

இதேவேளையில் புதுக்குடியிருப்பு, மாத்தளன், அம்பலவன்பொக்கணை, வலைஞர்மடம் பகுதிகளில் சிறிலங்கா படையினர் இன்று காலை 5:30 நிமிடம் தொடக்கம் பிற்பகல் 3:30 நிமிடம் வரை ஆட்லெறி எறிகணை, பல்குழல் வெடிகணை, மோட்டார் மற்றும் பீரங்கித் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.

இதில் 44 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 46 பேர் காயமடைந்துள்ளனர்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.