தமிழ் மக்கள் ஜெனரல் பொன்சேகாவிற்கு வாக்களிக்க மாட்டார்கள் ‐ இ.தொ.க

தமிழ் மக்கள் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகாவிற்கு வாக்களிக்க மாட்டார்கள் என இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
 
எதிர்வரும் ஜனவரி மாதம் 26ம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் ஜெனரல் சரத் பொன்சேகாவிற்கு ஆதரவளிக்கக் கூடிய சாத்தியமில்லை என கட்சியின் சிரேஸ்ட உறுப்பினரும், தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சருமான முத்து சிவலிங்கம் தெரிவித்துள்ளார்.

cwcஜெனரல் சரத் பொன்சேகா ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால் அவர் ஓர் சர்வாதிகாரியாகவே செயற்படுவார் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
மாற்றுக் கருத்துக்களுக்கு எதிராக ஜெனரல் சரத் பொன்சேகா அடக்குமுறைகளை பிரயோகிக்கக் கூடுமென அவர் தெரிவித்துள்ளார்.
 
நாட்டை ஆட்சி செய்வதற்கு தேவையான அரசியல் அறிவோ அல்லது அனுபவமோ சரத் பொன்சேகாவிற்குக் கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
சிறுபான்மை மக்கள் ஒருபோதும் பொன்சேகாவிற்கு வாக்களிக்க மாட்டார்கள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
சிறுபான்மை மக்களின் அபிலாஷைகளுக்கு அரசாங்கம் ஜெனரல் சரத் பொன்சேகாவின் அரசாங்கம் மதிப்பளிக்காது என அவர் தெரிவித்துள்ளார்.
 
இதேவேளை, பெருந்தோட்ட மக்கள் மத்தியில் ஜனாதிபதியின் மீதான நன்மதிப்பு உயர்வடைந்துள்ளதாக ஜனாதிபதியின் சிரேஸ்ட ஆலோசகர் பெசில் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.
 
கொட்டகலையில் நடைபெற்ற இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போது இந்தக் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.