சரத் பொன்சேக்காவிற்கு மேற்குலக நாடுகளின் ஆதரவைப் பெற எதிர்க்கட்சிகளின் பொதுக் கூட்டமைப்பு விசேட வேலைத்திட்டம்

எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் ஜெனரல் சரத் பொன்சேக்காவிற்கு மேற்குலக நாடுகளின் ஆதரவை பெறுவதற்காக எதிர்க்கட்சிகளின் பொதுக் கூட்டமைப்பு விசேட வேலைத்திட்டமொன்றை முன்னெடுத்துள்ளது.

ponsekaசரத் பொன்சேக்காவுக்கு சீனாவின் ஆதரவைப் பெற்றுக்கொடுக்கும்  பொறுப்பை ஜே.வீ.பீ ஏற்றுள்ளதாக அரசியல் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னாள் இராணுவ அதிகாரியான சரத் பொன்சேக்கா ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து இந்தியா முதலில் இணக்கம் எதனையும் வெளியிடத நிலையில்,இந்தியாவின் ஆதரவைப் பெறுவதற்காக எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் விரிவான வேலைத்திட்டமொன்றை முன்னெடுத்துள்ளதாக தெரியவருகிறது.
 
முன்னாள் இராணுவத் தலைவர் ஒருவர் அரசியலுக்கு வருவது குறித்து எந்த நாடுகளும் எவ்வித அச்சத்தை கொள்ள தேவையில்லை என எதிர்க்கட்சியின் பிரதான பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். நாட்டில் சுதந்திரத்தையும் ஜனநாயகத்தையும் ஸ்தாபிப்பதற்கும் கொள்கைகளுடன் சரத் பொன்சேக்கா ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்குவார் எனவும் அந்த பேச்சாளர்
கூறியுள்ளார். அவர் தனது கொள்கையை முன்வைத்த பின்னர் ஏற்பட்டுள்ள சந்தேகங்களுக்கு தீர்வு ஏற்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
அதேவேளை தனது எதிர்கால நடவடிக்கைகளை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு இந்திய அரசாங்கத்தின் ஆதரவு தமக்கு தேவையென சரத் பொன்சேக்கா அண்மையில் இந்திய வானொலியொன்றிடம் கருத்து வெளியிட்டிருந்தார்.இந்தியா மிக முக்கியமான நாடென தான் கருதுவதாகவும் தனது எதிர்கால் திட்டங்களை நிறைவேற்ற இந்திய மத்திய அரசாங்கத்தின் ஆதரவு அத்தியவசியமானது எனவும் சரத்பொன்சேக்கா கூறியுள்ளார். எனினும் இந்திய அதிகாரிகள் இது குறித்து நேற்று வரை எவ்வித கருத்துக்களையும் வெளியிடவில்லை.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.