எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சரத்பொன்சேக்கா அன்னப்பறவை சின்னத்தின் கீழ் போட்டியிட தீர்மானம்

இலங்கை அரசியலில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட முப்படைகளின் முன்னாள் பிரதானி ஜெனரல் சரத்பொன்சேக்கா அன்னப்பறவை சின்னத்தின் கீழ் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தீர்மானித்துள்ளார்.

sarathமுப்படைகளின் முன்னாள் பிரதானி பதவியிலிருந்து ஓய்வு பெற்ற ஜெனரல் சரத்பொன்சேக்கா தமது எதிர்கால செயற்பாடு குறித்து என்ன அறிவிப்பார் என எதிர்பார்ப்பு இலங்கையர்கள் மத்தியில் மாத்திரமின்றி புலம்பெயர்ந்த மக்கள் மத்தியிலும் காணப்பட்டது.

அத்துடன் பிரதான எதிர்கட்சிகள் தமது பொது வேட்பாளர் ஜெனரல் சரத்பொன்சேக்கா என அறிவித்திருந்த ஒரு சூழ்நிலையிலும், ஊடகங்கள் கடந்த காலங்களில் கேட்டுவந்த கேள்விக்கு பதிலளிக்கும் முகமாகவும் முப்படைகளின் முன்னாள் பிரதானி ஜெனரல் சரத் பொன்சேக்கா எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ளதாக குறிப்பிட்டார். இன்று இடம்பெற்ற விஷேட செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

பெரும்திரளாக உள்ளுர் மற்றும் சர்வதேச செய்தியாளர்கள் குழுமியிருந்த இந்த ஊடவியலாளர் சந்திப்பில் முப்படைகளின் முன்னாள் பிரதானி ஜெனரல் சரத் பொன்சேக்கா தெரிவித்த கருத்து வருமாறு…..

கடந்த காலங்களில் ஊடகங்கள் என்னிடம் பல்வேறு கேள்விகளத் தொடுத்து வந்தன. அதில் முதாலாவது ஓய்வின் பின் நீங்கள் என்ன செய்வீர்கள்? அரசியலுக்குள் பிரவேசிப்பீர்களா? என வினவினர். இதற்கு பதிலளிக்கும் தருணம் இதுவே. நான் ஓய்வின்பின் மக்களுக்காக சேவையாற்றவுள்ளதாக குறிப்பிட்டேன். அந்தவகையில் மக்களுக்கு சேவையாற்றும் பொருட்டு நான் அரசியலுக்குள் பிரவேசிக்கின்றேன். எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின் போது ஜனாதிபதி வேட்பாளராக நான் போட்டியிடவுள்ளேன்.

நான் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட பல காரணங்கள் உண்டு. பயங்கரவாதிகளிடம் இருந்து மீட்டெடுத்த இந்த நாட்டை ஓர் அராஜக ஆட்சியின் கீழ் கொடுத்துவிட என் மனம் இணங்கவில்லை அதனால் நான் இந்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்றேன்.

இந்த நாட்டில் பயங்கரவாதம் தோற்கடிக்கப்படுவதற்காக நாம் கடுமையாக போராடி இந்த நாட்டினை மீட்டுள்ளோம் ஆனால் சிலர் அவர்களின் சர்வாதிகார ஆட்சிக்காகவும், தமது குடும்ப அரசியலுக்காகவும் இந்த நாட்டை சீரழிவிற்கு கொண்டு செல்கின்றனர். இதனைத் தடுக்கும் முகமாகவே நான் ஜனாதிபதி தேர்தலில் எதிர்கட்சிகளின் பொது வேட்பாளராக போட்டியிடவுள்ளேன்.

நான் அன்னப்பறவை சின்னத்தின் கீழ் போட்டியிட முடிவுசெய்துள்ளேன். நான் அரசியலில் புதிய மாற்றமொன்றை எதிர்பார்க்கின்றேன். எமது நாட்டின் அரசியலில் சுமார் 50 வருடமாக எதுவித மாற்றங்களும் ஏற்படவில்லை. நான் எமது அரசியிலிலும், அரசியல் சாசனத்திலும் மாற்றங்களைக் கொண்டுவர எண்ணுகின்றேன். இதற்கான வாய்ப்பு எனக்கு கிடைக்குமானால் நான் அதனைத் தவறவிடமாட்டேன்.

எனது அரசியல் பிரவேசத்தை தடுக்கும் முகமாக இந்த அரசு என்மீது சேறுபூசுகின்றது. நான் யுத்தத்தை வெற்றிகொண்ட போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ என்னை வாயாரப் பாராட்டினார். இந்திய பாதுகாப்பு ஆலோசகர் என்னை சர்வதேச இராணுவத் தளபதிகளில் சிறந்தவர் என பாராட்டியதாக பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ குறிப்பிட்டார். இப்படி குறிப்பிட்டவர்கள் இன்று நான் இராணுவத் தளபதியாக செயற்பட்டதற்கு தகுதியானவர் அல்ல என என்மீது சேறுபூசுகின்றனர். இவையனைத்தும் நான் அரசியலுக்கு பிரவேசிப்பதைத் தடுப்பதற்கே.

இந்த நாட்டு மக்கள் ஒன்றை சிந்திக்க வேண்டும் கடந்த நான்கு ஆண்டுகளில் இந்த நாட்டில் என்ன நடந்துள்ளது. யுத்தம் மட்டுமே தேர்றகடிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தினால் என்ன செய்யப்பட்டது என சிந்திக்க வேண்டும் எதிர்காலத்தில் இலங்கையின் நிலைமை இந்த நாட்டு மக்களின் கைகளிலேயே தங்கியுள்ளது.

மக்கள் இதனை நன்கறிவதுடன் தமதும், தமது பிள்கைளினதும் எதிர்கால வாழ்வினை சரியான முறையில் கொண்டு நடாத்துவதற்கு சிறந்தோர் அரசாங்கம் மற்றும் தலைவர் அமைவது அவசியம் என்பதை புரிந்து கொள்ளவேண்டும்.

இது குறித்து நன்கு சிந்திக்கும் மக்கள் தமது தலைவரை தெரிவு செய்யும் பொருட்டு ஜனாதிபதி தேர்தலின் போது தமது வாக்கினை சரியாக பயன்படுத்தவேண்டும் எனவும் தெரிவித்தார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.