உலங்குவானூர்தி விபத்துக் குறித்து விசாரணை நடத்த விசேட விசாரணைக் குழு ‐ விமானப் படைத் தளபதி

இலங்கை விமானப் படைக்கு சொந்தமான எம்.ஜ.24 தாக்குதல் உலங்குவானூர்தி விபத்துக்குள்ளான சம்பவம் குறித்து விசாரணை நடத்த விசேட விசாரணைக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக விமானப் படைத் தளபதிவும் கூட்டுப்படைகளின் தலைமையதிகாரியுமான எயார் சீப் மார்ஷல் ரொஷான் குணதிலக்க தெரிவித்துள்ளார்.

roshankunaபுத்தள பிரதேசத்தில் இருந்து சுமார் 5 கிலோ மீற்றர் தொலைவில் பறைய்யன் எல்ல பிரதேசத்தில் வெள்ளிக் கிழமை முற்பகல் 1.30 அளவில் இந்த உலங்குவானூர்தி விபத்துக்கு உள்ளானது. தொழிற்நுட்ப கோளாறு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாக விமானப் படைத் தளபதி கூறியுள்ளார்.
 
இந்த விபத்தில் விடுதலைப்புலிகளுக்கு எதிரான ஈழ யுத்தத்தில் பாரிய பணிகளை மேற்கொண்ட திறமையான இரண்டு விமானிகளான ரொஷான் பர்ணாந்து, எசல தொடன்மலுவ ஆகியோரும், இரண்டு விமான துப்பாக்கிதாரிகளும் விபத்தில் கொல்லப்பட்டுள்ளதாக ரொஷான் குணதிலக்க குறிப்பிட்டுள்ளார்.
 
ஹிங்குராக்கொட விமானப் படை முகாமில் இருந்து வீரவில பிரதேசத்திற்கு பயிற்சிக்காக சென்ற போதே இந்த விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.