இடம்பெயர் மக்களின் உரிமைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் ‐ உலகத் தலைவர்கள்

இடம்பெயர் மக்களின் உரிமைகளை பாதுகாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென உலக தலைவர்கள், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 
வயது முதிர்ந்த உலகத் தலைவர்களினால் இந்த விசேட கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Aftermath_IDP5யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து வாழும் அப்பாவி பொதுமக்கள் பல்வேறு சிக்கல்களை எதிர்நோக்கி வருவதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
 
இடம்பெயர் மக்கள் துரித கதியில் சுதந்திரமாக இடம் நகர அனுமதிக்கப்பட வேண்டுமென என நோபள் பரிசு வென்ற பேராயரும், வயது முதிர்ந்த உலகத் தலைவர்கள் அமைப்பின் உறுப்பினருமான பேராயர் டெஸ்ட்மன் டுடு எழுத்து மூலம் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
 
தொண்டு நிறுவனங்கள் மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கு அனுமதிக்கப்பட வேண்டுமென அவர் மேலும் கோரிக்கை விடுத்துள்ளார்.
 
மீள் குடியேற்ற நடவடிக்கைகள் தொடர்பில் தமது அமைப்பு உன்னிப்பாக அவதானித்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
 
யுத்த காலத்தில் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
இலங்கை இடம்பெயர் மக்களுக்கு தமது விஜயத்தின் மூலம் நன்மை கிட்டும் என்றால் வயது முதிர்ந்த உலகத் தலைவர்கள் அமைப்பு பிரதிநிதிகள் விரைவில் இலங்கைக்கு விஜயம் செய்வார்கள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.