சரத் பொன்சேகா கீழ்த்தரமான ஓர் அரசியல்வாதியாக உருவாக முயற்சிக்கின்றார் – கோதபாய

முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா ஓர் கீழ்த்தரமான அரசியல்வாதியாக உருவாக முயற்சி மேற்கொண்டு வருவதாக பாதுகாப்புச் செலயாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
 
ஜெனரல் சரத் பொன்சேகாவை விடவும் மிகச் சிறந்த இராணுவத் தளபதிகள் கடந்த காலத்தில் இருந்ததாகவும், தற்காலத்தில் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

kothapaya2005ம் ஆண்டுக்கு முன்னர் ஜெனரல் சரத் பொன்சேகா யார் என கேள்வி எழுப்பியுள்ளார்.
 
கீழ்த்தரமான அரசியல்வாதியாக உருப்பெறுவதற்கு சரத் பொன்சேகா முயற்சி செய்து வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
இராணுவப் படையினருக்கு அபகீர்த்தி ஏற்படும் செயற்பாடுகளை ஜெனரல் சரத் பொன்சேகா தவிர்க்க வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.