நாம் தமிழர் இயக்கத்தின் மீது பொய்வழக்கு ‐ சீமான்

சென்னையில் உள்ள காங்கிரஸ் பிரமுகர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் வீடு மீது குண்டு வீசிய வழக்கில் நாம்தமிழர் இயக்க உறுப்பினர்கள் மூன்று பேர் கைது செய்யபப்ட்டனர். இந்நிலையில் இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த சீமான் .நாம் தமிழர் இயக்கத்தின் வளர்ச்சியை தடுக்கும் நோக்கத்தில் நாம் தமிழர் இயக்கத்தைசேர்ந்த தம்பிகளை கைது பொய் வழக்கு போட்டு செய்துள்ளனர்.

seemanபெட்ரோல் குண்டு வீசியதாகக்கூறிய நேரத்தில் அந்த தம்பிகள் கனடாவிலிருந்து விமானத்தில் வந்த என்னுடன் விமான நிலையத்தில் என்னுடன் இருந்தனர். என்னுடன் இருந்ததற்கு ஆதாரங்கள் உள்ளன.
 
ஆனால் என் தம்பிகள்தான் பெட்ரோல் குண்டு வீசினார்கள் என்பதற்கு போலீசிடம் ஆதாரம் இல்லை. ஈழத்தமிழ் மக்களின் மனதை புண்படுத்தும் வகையில் பெரியகட்சியில் உள்ள ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பிரபாகரனின் பேனரை கிழித்தது சரியா? தமிழ்நாட்டில் தமிழில் தான் பெயர்பலகை வைக்க வேண்டும் என்று சட்டம் இருந்தும் அது நடைமுறையில் பின்பற்றப்படுவதில்லை. என்றார் சீமான்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.