விடுதலைப்புலிகளை ஆதரிப்போர் தேசவிரோதிகள்: மத்திய இணையமைச்சர் நாராயணசாமி

விடு​தலைப்புலகளை ஆதரிப்போர் மீது தமிழக,​ புதுச்சேரி அரசுகள் கடும் நட​வடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய திட்டத் துறை இணையமைச்சர் வி.நாராயணசாமி வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து புதுச்சேரியில் செய்தியாளர்களடம் பேசிய அவர், ’’இந்தியாவில் தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஆதரித்து தமிழகத்திலும்,​புதுச்​சேரியிலும் ஒரு சில அரசியல்வாதிகளும் ஒரு சில அமைப்பினரும் பேசி வருகின்றனர்.

question-maki-karunaபல முறை கைது செய்​யப்​பட்டு நட​வ​டிக்கை எடுத்​தப் பிற​கும் தொடர்ந்து வைகோ விடு​த​லைப் புலி​களை ஆத​ரித்து வரு​கி​றார். தடை செய்​யப்​பட்ட இயக்​கத்​துக்கு ஆத​ர​வாக யார் செயல்பட்டாலும் அவர்​கள் தண்​டிக்​கப்​பட வேண்​டும்.

அவர்​ள் தேச விரோதிள். எனவே,​ அவர்கள் மீது தமிழக,​ புதுச்சேரி அரசுகள் கடுமையான நடவ​டிக்கை எடுக்க வேண்​டும்.
 
தமி​ழ​கத்​தில் காங்​கி​ரஸ் தலை​வர்​க​ளில் ஒரு​வ​ரான இளங்​கோ​வன் வீடு மீது ஒரு கும்​பல் தாக்​கு​தல் நடத்​தி​யுள்​ளது. இ​து​தொ​டர்​பா​க த​மி​ழக முதல்​வர் நட​வ​டிக்கை எடுத்து,​ அவர்​களை கைது ​செய்​துள்​ளார்.

அதை நாங்கள் வரவேற்கிறோம். அதே நேரத்​தில் தடை செய்யப்பட்ட இயக்கங்களை ஆதரிப்​போர் மீது தேச விரோத சட்டம் பாய வேண்​டும்’’என்று தெரிவித்தார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.