மீனவர் படுகொலை சந்தேகத்தில் மூன்று கடற்படையினர் கைது

திருகோணமலையில் மீனவர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் பேரில் மூன்று கடற்படையினரை பொலிஸார் நேற்றுக் கைது செய்துள்ளனர் எனத் தெரி விக்கப்படுகிறது. கொட்டியாரக்குடா துறைமுகத்தில் கடமையாற்றிய கடற்படை வீரர்களையே, சீனன்குடா பொலிஸார் கைது செய்துள்ளனர்.

handcuff1குறித்த பகுதியில் காவல் பணியில் ஈடுபட்டிருந்த கடற்படையினரே  இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது. இந்தப் படுகொலைச் சம்பவம் தொடர்பில் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

குற்றவாளிகளை கைது செய்யுமாறு திருகோணமலை மக்கள்  நடத்திய ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து குறித்த மூன்று கடற்படையினரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர் எனக் கூறப்படுகிறது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.