அமெரிக்காவின் யுத்த குற்ற சாட்டு மஹிந்தவின் ஆய்வுகுழு அடுத்த மாதம் அறிக்கை சமர்ப்பிக்குமாம்

இலங்கைக்கு எதிராக அமெரிக்காவால் சுமத்தப்பட்டிருக்கும் யுத்தக்குற்றச்சாட் டுகளின் உண்மைத்தன்மை குறித்து ஜனாதிபதி ஆணைக்குழு அடுத்த மாதம் ஜனா திபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்க உள்ளது.  இலங்கையின் யுத்தக் குற்றங்கள் தொடர் பாக அமெரிக்க காங்கிரஸுக்கு அறிக்கை ஒன்று கிடைக்கப் பெற்றிருந்தது.

makinthaஇந்த அறிக்கை பகிரங்கப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து யுத்தக்குற்றச்சாட்டுகள் தொடர்பில் உடன் விசாரணை நடத்துமாறு ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்றை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நியமித்திருந்தார்.

இந்நிலையிலேயே மேற்படி ஆணைக்குழுவினரால் கண்டுபிடிக்கப்பட்ட விடயங்கள் அடுத்த மாத இறுதியில் ஜனாதிபதிக்கு சமர்ப்பிக்கவுள்ளனர். இந்த அறிக்கையை அடுத்த மாத இறுதியில் தமக்கு சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.