25 லட்சம் வாக்காளர்களுக்கு அடையாள அட்டை இல்லை ஆள்பதிவுத் திணைக்களம் தகவல்

நாட்டிலுள்ள 25 லட்சத்துக்கும் அதிகமான வாக்காளர் களுக்கு தேசிய அடையாள அட்டை இல்லை  என்று ஆள் பதிவுத் திணைக்களம் தெரிவிக்கிறது. 2008ஆம் ஆண்டின் வாக்காளர் பட்டியலுக்கு  அமைய இந்த எண்ணிக்கை 26 லட்சமெனத் தெரிவிக்கப்படுகிறது.

questionskvoor090500048ஜனாதிபதித் தேர்தலுக்கு முன் அடையாள அட்டை இல்லாதோருக்கு அடையாள அட்டை வழங்க விசேட செயற்றிட்டமொன்றை          நடைமுறைப்படுத்தப்படவுள் ளது என ஆட்பதிவுத் திணைக்கள ஆணையாளர் நாயகம் ஏ.ஜீ.தர்மதாஸ தெரிவித்தார்.  இதுவரை ஒரு லட்சத்து 46 ஆயிரம் பேர் அடையாள அட்டைகளைக் கோரி விண்ணப்பங்களைச் சமர்ப்பித்துள்ளனர் என அவர் மேலும் கூறினார்.

பிரதேச செயலாளர் செயலக மட்டத்தில் ஒரு வருடத்துக்கு மட்டும் செல்லுபடியாகும் அடையாள அட்டையொன்றை வழங்குவதற்கான செயற்றிட்டம் ஒன்றும் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.