நாட்டை மீட்டது போல் நாட்டையும் காக்க வேண்டும்! சரத்பொன்சேகாவுக்கு பெளத்த பீடாதிபதிகள் ஆசீர்வாதம்!

ஓய்வு பெற்ற முன்னாள் சிறீலங்காப் முப்படைகளின் பிரதானி ஜெனரல் சரத்பொன்சேகா  கண்டிக்குச் சென்று பெளத்த பீடாதிபதிகளைச் சந்தித்து ஆசீர்வாதம் பெற்றுள்ளார்.

makanayaka_sarath_kandy_01ஐக்கிய தேசிய முன்னணி ஆதரவாளர்களுடன் இன்று கண்டி தலதா மாளிக்கைக்குச் சென்ற சரத்பொன்சேகா அஸ்கிரிய மற்றும்  மல்வத்த பீடாதிபதிகளை  சந்தித்து ஆசி பெற்றார்.

யுத்தத்தின் மூலம் நாட்டை மீட்டது போல் நாட்டையும் காக்க வேண்டும் என பீடாதிபதிகள் ஆசி வழங்கியுள்ளனர்.

சரத்பொன்சேகாவுடன் ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த திஸ்ஸ அத்தநாயக்க மற்றும் ஜெயலத் ஜெயவர்த்தனவும் உடன் இருந்துள்ளனர்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.