இடம்பெயர் மக்கள் இன்று முதல் உறவினர்கள் வீடுகளுக்குச் சென்று திரும்ப அனுமதி??

வவுனியா உள்ளிட்ட இடம்பெயர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்கள் இன்று முதல் உறவினர்கள் வீடுகளுக்குச் சென்று திரும்புவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
 
இன்றைய தினம் முதல் தங்களது உறவினர்கள் வீடுகளுக்கு விரும்பியவாறு சென்று திரும்புவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த நிவாரண மற்றும் புனர்வாழ்வு அமைச்சின் செயலாளர் யூ.எல்.எம். ஹால்டீன் தெரிவித்துள்ளார்.

question_3dஇடம்பெயர் முகாம்களில் சுமார் 120000 மக்கள் தங்கியிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
இந்த புதிய நடைமுறையின் அடிப்படையில் இடம் பெயர் மக்களுக்கு விசேட அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்பட உள்ளதாகவும், இந்த அனுமதிப் பத்திரங்களை பயன்படுத்தி உறவினர்; வீடுகளுக்கு விரும்பியவாறு சென்று திரும்ப முடியும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
 
அருணாச்சலம், ராமனாதபுரம் கதிர்காமர், மெனிக்பாம், வலயம் 5, வலயம் ஆறு மற்றும் வலயம் 6 ஈ ஆகிய முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு இந்த சலுகை வழங்கப்பட்டுள்ளது.

எது எவ்வாறாயினும் இந்த நாடகமெல்லாம் தேர்தலுக்காகவே தவிர வேறொன்றுக்கும் இல்லை இது அனைவரும் அறிந்ததே. தேர்தல் முடிவடைந்ததும் புலியின் பெயரை சொல்லி மறுபடியும் தமது அட்டகாசத்தை ஆரம்பிப்பார்கள்.

இந்த செய்தியின் உண்மை தன்மையை நெருடலால் உறுதி செய்ய முடியவில்லை.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.