பாலவர்ணம் கொலை வழக்கில் சாட்சியமளித்த பெண் தமக்கு உயிர் அச்சுறுத்தல் ஏற்படக் கூடுமென அச்சம்

பாலவர்ணம் சிவகுமார் என்ற சித்த சுயாதீனமற்ற நபர் அண்மையில் பம்பலப்பிட்டி கடலில் படுகொலை செய்யப்பட்டதாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களின் பிரதான சாட்சியாளர் தமக்கு உயிர் அச்சுறுத்தல் ஏற்படக் கூடுமென அச்சம் வெளியிட்டுள்ளார்.

question-mark3aகுறித்த பெண் சாட்சியாளர் காவல்துறை உத்தியோகத்தர்களுக்கு எதிராக நீதிமன்றில் சாட்சியமளித்தமை குறிப்பிடத்தக்கது.
 
ரேணு குணதிலக்க என்ற பெண் சாட்சியாளரே இவ்வாறு அச்சம் வெளியிட்டுள்ளார்.
 
காவல்துறையினருக்கு எதிராக தாம் சாட்சியமளித்துள்ளதாகவும், தம்மை கொலை செய்வதற்கு அவர்கள் வேறும் நபர்களை கூலிக்கு அமர்த்தக் கூடும் எனவும் ரேணு தெரிவித்துள்ளார்.
 
தாம் தனியாக வாழ்ந்து வருவதாகவும், தமக்கு எதிராக சில குற்றச் சாட்டுக்கள் சுமத்தப்பட சந்தர்ப்பம் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
பாலவர்ணம் சிவகுமார் கடலில் மூழ்கி உயிரிழப்பதற்கு காவல்துறையினரின் நடவடிக்கைகளே காரணம் என பல தரப்புக்களிலிருந்து விமர்சனங்கள் வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பித்தக்கது.
 
பாலவர்ணம் மீது காவல்துறையினர் தாக்குதல் நடத்தும் காட்சிகள் தொலைக்காட்சி அலைவரிசைகளில் காண்பிக்கப்பட்டது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.