மகிந்தவை வெளியேற்றுவோம்! பாராமன்றத்தைக் கலைப்போம் – ஜேவிபி

ஸ்ரீலங்கா அரசாங்கம் ஜே.வி.பியின் இந்த ஊர்வலத்தை தடுப்பதற்கு பல்வேறு பிரயத்தனங்களை மேற்கொண்ட போதிலும் நீதிமன்றத்தின் உத்தரவுடன் ஜே.வி.பி வெற்றிகரமாக இந்த பேரணியை நடத்தி முடித்துள்ளது.

இதில் கருத்து வெளியிட்ட கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லால் காந்த தமது கட்சியினால் தெரிவு செய்யப்பட்ட மகிந்த ராஜபக்சவை தாங்களே வெளியேற்றவுள்ளதாக குறிப்பிட்டார்.

jvp-logoஇதேவேளை எதிர் கட்சிகளின் கூட்டமைப்பினையும் பொது வேட்பாளரையும் கண்டு அரசாங்கம் நோய் வயப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன் நெடடி தெரிவித்துள்ளார்.

சரத் பொன்சேகா ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால் உடனடியாக பாராளுமன்றம் கலைக்கப்படும் என ஜே.வி.பி தெரிவித்துள்ளது.

சரத் பொன்சோகவிற்கு ஆதரவாக நேற்று ஜே.வி.பியால் கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்ட பேரணியில் கலந்து கொண்ட அந்த கட்சியின் செயலாளர் தில்வின் சில்வா இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

எதிர்வரும் ஜனவரி மாதம் 26ம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட இரு தினங்களில் சரத் பொன்சேகா பாராளுமன்றத்தை கலைக்கும் உத்தரவை பிறப்பிப்பார் என்று அவர் சுறினார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.