இன்று எய்ட்ஸ் தினம் இலங்கையில் இதுவரை 312 பேர் இனங்காணப்பட்டுள்ளனர் 192 பேர் பலி

இன்று எய்ட்ஸ் தினம் உலகத்தில் 32 மில்லியன் மக்கள் இந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நோயினை குணப்படுத்துவதற்காக உலகம் முழுவதும் பெரும் பொருட்செலவில் ஆய்வுகள் நடந்துவருகின்றன. ஆனால் உருப்படியான தடுப்பு மருந்துகள் எவையும் இதுவரை கண்டுபிடிக்கப் படவில்லை என்றே கூறமுடியும்.

logo2-aidsஆனால் இயற்கையான தடுப்பு முறையாக பாதுகாப்பான பாலியல் உறவுமுறை என்பதே ஒரே ஒரு பாதுகாப்பு முறையாகும். இலங்கையில் 312 பேர் இதுவரை தொற்றுக்குள்ளாகி இருப்பதாக கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இதில் 197 பேர் இறந்துள்ளனர். தொற்று ஏற்பட்டவர்களில் 42 பேர் குழந்தைகள்.

யாழ் குடா நாட்டில் மூன்று பெண்கள் 2005 வரை கண்டு பிடிக்கபட்டனர். இவர்கள் மாறாத காய்ச்சல் நோயினால்  அவதிப்பட்டவேளையிலேயே ஆய்வு செய்து கண்டுபிடிக்கப்பட்டனர். இந்த  மூவரில் ஒருவர் மத்திய கிழக்கு நாடுகளில் பணிபுரிந்த ஒருவரை திருமணம் செய்தார். மற்றவர் யாழில் கண்ணிவெடியகற்ற வந்த ஒரு வெளி நாட்டவருடன் தொடர்புகளை பேணி இருந்தார். மூன்றாவது பெண்மணி இலங்கை இராணுவம் ஒருவருடன் உறவை வைத்திருந்தார்.

இவர்களில் ஒரு பெண்ணினது உறவினரும் ஊராரும் இவரை புறக்கணித்தனர் இந்த செய்தியினை  அப்போது யாழில் பணிபுரிந்து கொண்டிருந்த விடுதலைப்புலிகளின் பெண்கள் மருத்துவர்கள் தமிழீழ தேசிய தலைவரின் கவனத்திற்கு கொண்டு வந்தனர். பின்னர் தமிழீழ தேசிய தலைவரின் பணிப்பிற்கு அமைய அந்த பெண் நோயாளி வன்னிக்கு அழைத்து வரப்பட்டு அவருக்கு தேவையான வசதிகள் வழங்கப்பட்டு மருத்துவ பகுதியில் ஒரு வேலையும் கொடுக்கப்பட்டு வாழ்ந்து வந்தார்.

ஏனைய நோயாளிகளையும் அவர்கள் விரும்பினால் வன்னிக்கு வரும்படியும் தலைவர் மருத்துவ போராளிகளுக்கு அறிவுறுத்தினார். ஆனால் அவர்கள் கொழும்பிற்கு சென்று விட்டதாக கூறப்பட்டது. இதன் பின்னரே விடுதலைப்புலிகள் மருத்துவப்பிரிவில் எய்ட்ஸ் தடுப்பு பிரிவும் உருவாக்கப்பட்டு அதற்காக வெளி நாடொன்றிற்கு சிறப்பு பயிற்சிக்காக இரு மருத்துவ மாணவர்களும் அனுப்பபட்டனர். தொடர்ந்து வன்னிக்கு வரும் வெளி நாட்டவர்களும் மருத்துவரீதியாக பரிசோதனை அறிக்கையினை தரப்படவேண்டும் என்ற திட்டம் கொண்டுவரப்பட்டது. ஆனால்  நடைமுறைப்படுத்த முடியாத நிலையில் இருந்தது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.