ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தமிழ், சிங்கள கட்சிகளுக்கு இடையில் இணக்கப்பாடில்லை – மனோ கணேசன்

ம் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தமிழ் சிங்கள கட்சிகளுக்கு இடையில் இணக்கப்பாடில்லை என ஜனநாயக ஐக்கிய முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
 
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஜனாதிபதி வேட்பாளர் என்ற ரீதியில் தேசிய இனப்பிரச்சினைக்கு எவ்வாறான ஓர் தீர்வுத் திட்டத்தை முன்வைக்கின்றார் என்பதனை நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ManoGaneshan5தமிழர்களும், சமாதானத்தை விரும்பும் மக்களும் தேசிய இனப்பிரச்சினை குறித்த ஜனாதிபதியின் நிலைப்பாட்டை அறிந்து கொள்வதில் ஆர்வம் காட்டுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
 
13 ஆவது திருத்தச் சட்ட மூல அமுலாக்கம் தொடர்பில் ஜனாதிபதி எவ்வாறான ஓர் கருத்தை கொண்டுள்ளார் என்பதனை அறிவிக்க வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
ஜனாதிபதிக்கு ஆதரவு தெரிவித்து பிரச்சாரங்களை முன்னெடுத்து வரும் தமிழ் அரசியல் கட்சிகள் மற்றும் அரசியல்வாதிகளின் நிலைப்பாட்டை அறிந்து கொள்வதிலும் மக்கள் ஆர்வம் காட்டி வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
13 ஆவது திருத்தச் சட்ட மூல அமுலாக்கம் தொடர்பில் சம்பிக்க ரணவக்கவும், விமல் வீரவன்சவும் எதிரான கருத்துக்களை கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியும், ஈ.பி.டி.பி.யும் 13ஆவது திருத்தச் சட்ட மூலத்திற்கு அப்பாலான அதிகாரங்கள் வழங்கப்பட வழங்கப்பட வேண்டுமென வலியுறுத்தி வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
13 ஆவது திருத்தச் சட்ட மூலம் அமுல்படுத்தப்படும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இந்திய பிரதமர் மன் மோகன் சிங்கிடம் உறுதியளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.