மாவீரர் தினத்தன்று உலங்கு வானூர்தி வீழ்ந்து நொருங்கியது விபத்தல்ல

ஐதேக நாடாளுமன்ற உறுப்பினர் அகில விராஜ் காரியவாசம் அவர்கள் கடந்த மாதம் 27ம் திகதி புத்தள பகுதியில் வீழ்ந்து நொருங்கிய எம்.ஐ24 ரக வானூர்தி விபத்தால் வீழவில்லை எனத்தெரிவித்துள்ளார்.

இவ் வானூர்தி வீழ்ந்து நொருங்கியதன் பின்னணியில் வேறுபல காரணங்கள் இருக்கக்கூடும் என அவர் தகவல் வெளியிட்டுள்ளார். இச்சம்பவத்தில் விமானி றெகான் குணரட்னா உட்பட நான்கு வான்படையினர் கொல்லப்பட்டிருந்தனர்.

question-mark1a copyஅதனை அரசு விபத்து என கூறியபோதும் அது விபத்தல்ல எனவும் அனைத்துலக விமான நிலையத்திற்கான அடிக்கல்லை நாட்டும் விழாவில் அரசு தலைவர் கலந்து கொள்ளும் போது அவரின் பாதுகாப்புக்கு அனுப்பப்பட்ட உலங்கு வானூர்தியில் தொழில்நுட்ப கோளாறு ஏற்படுவது அரிதானது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இவ் அனர்தம் நிகழ்ந்த அன்று காலை 10.34 மணியளவில் றொகான் தனது காதலியுடன் தொலைபேசியில் உரையாடியதாகவும் இதனை செவிமடுத்தால் மேலும் பலதகவல்கள் தெரியவரும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.