விடுதலைப் புலிகளின் மூன்று கப்பல்கள் மீட்கப்பட்டுள்ளன ‐ அரசாங்கம்

தமிழீழ விடுதலைப் புலிகளின் மூன்று கப்பல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், அவை விரைவில் கொழும்பிற்கு கொண்டு வரப்படவுள்ளதாகவும் அரசாங்கம் அறிவித்துள்ளது.
 
தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச விவகாரப் பொறுப்பாளர் குமரன் பத்மநாதனிடம் நடத்திய விசாரணைகளின் அடிப்படையில் இந்த மூன்று கப்பல்களும் மீட்கப்பட்டுள்ளன எனவும் இன்னும் இரண்டு மூன்று வாரங்களுக்குள் புலிகளுக்குச் சொந்தமான மூன்று கப்பல்கள் இலங்கைக்கு கொண்டு வரப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

questionskvoor090500048பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் புலிகளின் இந்த கப்பல்கள் கொண்டு வரப்பட உள்ளதாகவும், இவை ஆயுத விநியோகத்திற்காக பயன்படுத்தப்பட்டவை எனவும் குறிப்பிடப்படுகிறது.
 
தமிழீழ விடுதலைப் புலிகள் யுத்த ரீதியாக தோற்கடிக்கப்பட்டதன் பின்னர் முதல் தடவையாக வெளிநாட்டு சொத்துக்களை முடக்கும் பணிகளை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது. அதன் ஒரு கட்டமாக இந்த கப்பல்கள் இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ளது.
 
சர்வதேச நாடுகளில் புலிகளுக்கு காணப்படும் சொத்துக்களை முடக்கி இலங்கைக்கு கொண்டு வருவதுடன், மறைந்திருக்கும் புலி உறுப்பினர்களை விரைவில் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.