தமிழீழ விடுதலைப் புலிகளின் சொத்து விபரங்கள் நாட்டு மக்களுக்கு அம்பலப்படுத்த வேண்டும் ‐ ரணில்

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் சொத்து விபரங்களை நாட்டு மக்களுக்கு அரசாங்கம் அம்பலப்படுத்த வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.
 
குறிப்பாக குமரன் பத்மநாதனிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் மூலம் கிடைக்கப் பெற்ற சொத்து விபரங்கள் குறித்து மக்கள் தெளிவு படுத்தப்பட வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

2103ranil-jமலேசிய ஹோட்டல் ஒன்றில் வைத்து குமரன் பத்மநாதன் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
 
மாத்தறையில் நடைபெற்ற சுதந்திரத்தின் மேடை என்னும் தொனிப் பொருளில் நடைபெற்ற கருத்தரங்கொன்றில் கலந்து கொண்ட போது ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
 
தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்து முடக்கப்பட்ட சொத்துக்களை ராஜபக்ஷ மற்றும் சகோதர நிறுவனம் விழுங்கி விடக் கூடாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
புலிகளின் சகல சொத்து விபரங்களையும் அரசாங்கம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.
 
குமரன் பத்மநாதனிடம் காணப்பட்ட பணம் மற்றும் சொத்துக்களுக்கு என்னவாயிற்று என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.