சிறையில் உள்ள புலிகளை உடன் விடுவிக்குமாறு மனிதாபிமான அமைப்பு அரசிடம் வேண்டுகோள்

இராணுவத்தால் நடத்தப்படும் முகாம்களுக்குள் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் முன்னாள் புலிப் போராளிகளை அரசு உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமென்று. இலங்கையிலுள்ள ஒப்லேற் சமூக சேவை என்கின்ற கிறிஸ்தவ மனிதாபிமான அமைப்பு அவசரமாகக் கோரிக்கை விடுத்துள்ளது.

manikfarm[1]இந்த முன்னாள் புலிப் போராளிகள் எதிர் காலம் பற்றிய நம்பிக்கை இல்லாமல் விரக்தியின் விளிம்பில் தவிக்கின்றார்கள் என்றும் இந்த மனிதாபிமான அமைப்பின் முக்கிய பிரமுகரும் முன்னாள் தலைவரு மான வண பிதா போல் ஜயந்தன் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர்  அரசுக்குத் தெரியப்படுத்தியுள்ளவை வருமாறு:
இந்த முன்னாள் புலிப் போராளிகளில் அநேகர் சிறுவர்களாக உள்ளனர். இம்முன்னாள் புலிப் போராளிகளில் பலர் காயமடைந்தவர்கள். உடலாலும் மனதாலும் தளர்ந்தவர்கள். சொந்த உறவுகளைப் பிரிந்து நிற்பவர்கள். இவர்களைத் தொடர்ந்தும் தண் டிக்கக்கூடாது. இவர்கள் விரக்தியின் விளிம் பில் இருக்கிறார்கள்.

நித்திரையின்றித் தவிக் கின்றார்கள். சிறுபான்மைத் தமிழர்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்துவிடப்பட்டிருக்கும் வன்முறைகள், பாராபட்சம் ஆகியவற்றுக்குப் பலிக்கடாவாகிவிட்டனர். சுமார் 11 ஆயிரம் முன்னாள் புலிப் போராளிகள் இவ்வாறு அடைத்து வைக்கப்பட்டிருக்கின்றார்கள். அவர்களை அரசு மனிதாபிமான அடிப்படையில் உடன் விடுதலை செய்ய வேண்டும்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.