தமிழர்களை பட்டினியுடன் வேலை வாங்கும் இலங்கை இராணுவம்

வன்னி முகாம்களிலிருந்து மீள்குடியமர்த்தப்பட்ட தமிழர்களை போதிய உணவு அளிக்காமல் பட்டினிபோட்டு தங்களுக்கு தேவையான பணிகளை செய்யுமாறு இலங்கைப் படையினர் துன்புறுத்தி வருவதாக செய்தி வெளியாகி உள்ளது.

வன்னி முகாம்களிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் சமீபத்தில் முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் குடியமர்த்தப்பட்டுள்ளனர்.

nerudal-tamil-newsஅந்த மக்களுக்கு போதுமான உணவு வசதிகளை ஏற்படுத்தி கொடுக்கப்படவில்லை. ஆனால் படையினருக்கு தேவையான வேலைகளை செய்யுமாறு அவர்கள் மிரட்டப்படுவதாக வன்னியிலிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்த பகுதிகளுககான உணவு விநியோகத்தை திட்டமிட்டு மட்டுப்படுத்தியுள்ள ராணுவம், மக்களைப் பட்டினி போட்டு துன்புறுத்துவதோடு, தமக்கான வேலைகளையும் மக்களே செய்யவேண்டும் என வற்புறுத்தி வருகின்றது.

வன்னியில் மீள்குடியமர்த்தவென கொண்டு செல்லப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் அங்குள்ள பாடசாலைகளில் தங்கவைக்கப்பட்டுள்ளதால் ராணுவம், அவர்களின் நடமாட்டங்களை முற்றாக தடுத்துவைத்துக்கொண்டு, தாம் நினைத்தபோது இவ்வாறு மக்களைத் துன்புறுத்தி வருகின்றது.

அரசு செயலக புள்ளி விவரங்களின்படி நவம்பர் மாதம் 18 ஆம் தேதி வரை 6,037 பேர் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள துணுக்காய் பகுயிலும், நவம்பர் 17 ஆம் தேதி வரை 2,821 பேர் கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள ஜெயபுரம், அக்கராயன்குளம், முழங்காவில், நாச்சிக்குடா ஆகிய பகுதிகளிலும் குடியமர்த்தப்பட்டுள்ளனர்.

இதுதவிர வலைப்பாடு மற்றும் கிராஞ்சி பகுதிகளிலும் மக்கள் குடியமர்த்தப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேசமயம், உலக உணவு திட்ட நிறுவனத்தினரால் அரசு மூலமாக விநியோகிக்கப்பட்ட உலர் உணவு பொருட்கள் பல நோக்கு கூட்டுறவு சங்கங்களின் ஊடாக விநியோகிக்கப்படுகின்றன.ஆனால் அவை பற்றாக்குறையாக உள்ளதோடு, ஒரு வருடத்திற்கு முந்தை கெட்டுப்போன உணவு பொருட்கள் என்றும் கூறப்படுகிறது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.