ஜனாதிபதித் தேர்தலின் போது நான்கு வெளிநாட்டு கண்காணிப்புக் குழுக்கள் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளன – ஐ.தே.க

எதிர்வரும் ஜனவரி மாதம் 26ம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலின் போது நான்கு வெளிநாட்டு கண்காணிப்புக் குழுக்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது.

unp_logo_1தேர்தல் நடவடிக்கைகளை கண்காணிக்கும் நோக்கில் நான்கு வெளிநாட்டு கண்காணிப்புக் குழுக்கள் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாக தேர்தல் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்  என தெரிவிக்கப்படுகிறது.

 ஐக்கிய நாடுகள் அமைப்பு, ஐரோப்பிய ஒன்றியம், ஆசிய தேர்தல் கண்காணிப்பு குழு உள்ளிட்ட நான்கு குழுக்கள் தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.