ஐ.நாவின் விசேட பிரதிநிதி இலங்கைக்கு 6 நாள் விஜயம்

சிறுவர்கள் மற்றும், ஆயுத வன்முறைகள் தொடர்பான ஐக்கிய நாடுகளின் விசேட பிரதிநிதி மேஜர் ஜெனரல் பற்றிக் கமேயற் என்பவரே நாளை இலங்கை செல்லவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் அந்நாட்டில் எதிர்வரும் 11 ஆம் திகதி வரை தங்கியிருப்பார் என தெரிவிக் கப்பட்டுள்ளது. இலங்கை அரசாங்கத்தின் அழைப்பை ஏற்றே அவர் இலங்கை செல்கிறார்.

unதமது விஜயத்டதின் பின்னர் இலங்கை நிலைவரம் தொடர்பான அறிக்கையை அவர், ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபை செயற்குழுவுக்கு சமர்ப்பிக்கவுள்ளார். அவர் இலங்கையில், இடம்பெயர்ந்த சிறுவர்களின் நிலை தொடர்பாக ஆராய்வது டன், அரசாங்க அதிகாரிகளையும், அரச சார்பற்ற நிறுவன அதிகாரிகளையும் சந்திக்கவுள்ளார்.

மேஜர் ஜெனரல் பற்றிக் கமேயற், நெதர்லாந்து கடற்படையில் பணியாற்றிய அதேநேரம், ஐக்கிய நாடுகளின் அமை திப்படைகளின் ஆலோசகராகவும் கடமையாற்றியுள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.