பத்மநாதன் அவர்களிற்கு ரோயல் உபசரிப்பு! – லக்பிம கூறுகின்றது

திரு கே.பி பத்மநாதன் அவர்களுக்கு ரோயல் உபசரிப்பு வழங்கப்பட்டுள்ளதுடன் அவர் விஐபி க்களிற்கான பாதுகாப்புடன் கொழும்பில் உலா வர அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் நம்பகரமான தகவல்கள் கூறுவதாக லக்பிம தெரிவித்துள்ளது. கேபி அவர்கள் தனது சொத்துக்களை கொடுத்து செய்த குற்றங்களிற்கான தண்டனைகளை விலைக்கு வாங்கி விட்டார் எனவும் கூறுகின்றது.

kpவன்னியில் இருந்து கைது செய்யப்பட்ட இயக்க உறுப்பினர்களை சிறையில் அடைத்து வைத்திருக்கும் அதேவேளை கேபி அவர்களை கொழும்பில் வசதியான பாதுகாப்பான பங்களா ஒன்றில் வைத்திருப்பதாகவும் அடிக்கடி அரச உயர்மட்டத்தினர், பாதுகாப்பு அதிகாரிகள் சென்று பார்வையிடுவதாகவும் கூறியுள்ளது லக்பிம.

இதே நேரம் ஐக்கிய தேசிய கட்சி கேபி அவர்களிடம் இருந்து பெற்ற சொத்துக்களை பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படவேண்டும் என கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.