ராஜபக்ச குடும்பத்தினரது ஊழல் மோசடிகளை பகிரங்கமாக்குவேன் – சரத் பொன்சேகா

ராஜபக்ச குடும்பத்தினரது ஊழல் மோசடிகள் குறித்த விபரங்களை தான் பகிரங்கப்படுத்தவுள்ளதாக முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

தான் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட பின்னர் ராஜபக்ச குடும்பத்தின் ஊழல்கள் மற்றும் முறையற்ற சொத்து சேகரிப்பு நடவடிக்கைகள் குறித்த விபரங்களை ஆதாரங்களுடன் வெளிப்படுத்தப் போவதாக அவர் கூறியுள்ளார்.

sarath2நேற்று வெலிசர பகுதியில் இடம்பெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் மகாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

யுத்த வெற்றியினை பெற்று தந்த படை வீரர்களை அரசாங்கம் தற்போது மறந்து விட்டதாகவும் அவர்கள் மிகவும் மோசமான முறையில் நடத்தப்படுவதாகவும் சரத் பொன்சேகா சுட்டிகாட்டியுள்ளார்.

தான் ஜனாதிபதியாக பதவியேற்றவுடன் முப்படையினருக்கும் சம்பன அதிகரிப்பை வழங்க அவர்கள் இந்த நாட்டில் கௌரவாமான வாழ்வினை தொடர்வதற்கு நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.