வன்னியில் இருந்து வந்த மக்களால் 2000 மில்லியன் ரூபா வரையில் வங்கிகளில் வைப்பு – அரசுக்கு அதிர்ச்சி கலந்த சந்தோசம்

வவுனியா தடுப்பு முகாம்களில் மேற்கொள்ளப்பட்ட   நடமாடும் வங்கி சேவைகள் மூலம் 2000 மில்லியன் ரூபா வரையான வைப்புக்கள் பெறப்பட்டுள்ளதாக மத்திய வங்கி ஆணையாளர் கப்றாள் கூறியுள்ளார். இதில் 50 வீதமானவை தங்க நகைகள் என்றும் மீதமானவை வெளி நாடுகளில் இருந்து உறவினர்களால் அனுப்பபட்ட பணம் எனவும் கூறியுள்ளார்.

cbsl_logoகுறிப்பிட்ட 05 மாதத்தினுல் இவ்வாறான வைப்புக்களை இதுவரை பெற்றதில்லை எனவும் அவர் கூறியுள்ளதுடன் இந்த வைப்பில் 50 வீதமானவற்றை திரும்ப கடன் கொடுக்க தீர்மானித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

இதுவரை 51 வங்கி கிளைகள் வடபகுதியில் திறக்க விண்ணப்பம் கிடைத்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.