ஆயுதப் போராட்டத்தை முன்னெடுக்க கிழக்கில் மக்கள் விடுதலை இராணுவம் என்ற அமைப்பு ஆரம்பம்!!!

ஸ்ரீலங்காவினால் தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் அடக்கு முறைகளுக்கு எதிராக ஆயுதப் போராட்டங்களை மேற்கொள்ளப் போவதாக கிழக்கைத் தளமாகக் கொண்ட மக்கள் விடுதலை இராணுவம் [ People’s Liberation Army – PLA ] என்ற அமைப்பு அறிவித்துள்ளது.

பிரித்தானியாவின் ரைம்ஸ் சஞ்சிகை இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

time-ukஇதுகுறித்து கோணேஸ் என்பவர் வழங்கிய நேர்காணலில் தெரிவிக்கப்பட்ட முக்கிய பகுதி வருமாறு:

பலஸ்தீன விடுதலை இயக்கம் மற்றும் கியூபா ஆகியவற்றுடன் நெருக்கமான உறவுகளை கொண்டுள்ள இந்த அமைப்பு ஆயுதப் போராட்டங்கள் மூலமே தமிழ் மக்களின் விடுதலை சாத்தியம் என்று அறிவித்துள்ளதாக ரைம்ஸ் குறிப்பிட்டுள்ளது.

தமது அமைப்பிற்கும் விடுதலைப் புலிகளிற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று அந்த அமைப்பின் தலைவராக தன்னை அறிவித்துள்ள கோணேஸ் தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப்புலிகள் இராணுவ ரீதியாக தோற்கடிக்கப்பட்டு 6 மாதங்கள் நிறைவடைந்துள்ள போதிலும் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு எந்த ஒரு தீர்வினையும் அரசாங்கம் முன்வைக்கவில்லை என்றும் அதனால் தாங்கள் ஆயுத போராட்டங்களில் ஈடுபட தீர்மானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது, தங்கள் இராணுவத்தில் 300 போராளிகள் இருப்பதாகவும், போரினால் பாதிக்கப்பட்ட இடம்பெயர்ந்த மக்களிடையே ஆட்களை இணைந்து 5000 போராளிகளாக அதிகரிப்பததே தமது அடுத்த இலக்கு எனக் கூறியுள்ளார்.

மக்கள் விடுதலை இராணுவத்தின் தலைவர் கோணேசுக்கு 40 அகவை எனவும் 1983 இல் இந்தியா உத்தரபிரதேசத்தில் கெரில்லா பயிற்சி பெற்றுள்ளார். அவர் பாலஸ்தீனியன் விடுதலை இயக்க பயிற்சியாளர்களிடம் இருந்தும் பயிற்சி பெற்றுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே தங்கள் இராணுவத்தில் அரச படைகளுக்கு எதிராகப் போராடி அனுபவம் கொண்ட போராளிகள் இருப்பதாகவும், தங்களதுஅமைப்பில் மத்திய குழுவைச் சேர்ந்த 10 பேர் உள்ளடக்கப்பட்பட்டுள்ளனர் எனக் தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்தவர்களும் தம்முடன் இணைந்து கொள்ளலாம். நாம் விடுதலைப்புலிகளை விட அரசியல் ரீதியாக அனுபவம் வாய்ந்தவர்கள், எனவே பயங்கரவாத முத்திரையை எவ்வாறு தவிர்ப்பது என்பது எமக்கு தெரியும் எனவும் கோணேஸ் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடுதலை அமைப்பு தொடர்பான பல கேள்விகளும், பின்னணிகளும், பின்னால் உள்ள இயங்கு சக்திகள் தொடர்பிலும் பல கேள்விகள் எழுந்துள்ளன.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.