ஐ. நா பிரதிநிதியின் சிறார் போராளிகள் சந்திப்பு ! ஓர் நாடகம்

ஐக்கிய நாடுகளின் வன்முறை மற்றும் சிறுவர் போராளிகள் தொடர்பான விசேட பிரதிநிதி அவர்கள் தடுப்பு முகாம்களில் உள்ள இளம் போராளிகளை சந்தித்துள்ளார். அரசாங்கத்தின் ஏற்பாட்டில் வரவழைக்கப்பட்ட ஐக்கிய நாடுகளின் விசேட பிரதி நிதியாகிய  மெஜர் ஜெனெரல் பற்றிக் கமென்ற் அவர்களும் அரசாங்கம் சார்பில் இராணுவ அதிகாரியான மேஜர் ஜெனெரல் தக நாயக்காவும் இந்த சந்திப்பில் பங்குபற்றியிருந்தனர்.

vanni campsசிறிலங்கா அரசு சந்தேகத்தின் பேரில் 11,000 இளைஞர்களை இவ்வாறு பிடித்து வைத்திருக்கின்றது. இதில் மிகவும் வயது குறைந்த போராளிகளில் 300 பேரை சந்திக்க வைத்திருப்பது ஒரு பிரச்சார நடவடிக்கையாகவும் அதே நேரம் தமது செயற்பாடுகளை இந்த இளம் சிறார்கள் மூலமாக ஐக்கிய நாடுகளுக்கு நியாயப்படுத்தும் நோக்கமாகவும் இருக்கலாம் எனவும் கருத இடமுண்டு.

காரணம் இதுவரை நான்கு மாதமாக சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தினையும் பிற நிதிஉதவி வழங்கும் நிறுவனங்களையும் அங்கு செல்ல அனுமதிக்கபடவில்லை என்பது குறிபிடத்தக்கது. சர்வதேச சட்டங்களின் படி போர் கைதிகளை கிழமைக்கு ஒரு தடவை பார்க்கவும் அவர்களை சர்வதேச செஞ்சிலுவை சங்கம் மருத்துவ பரிசோதனை செய்யவும் இலங்கை அரசும் விடுதலைப்புலிகளும் ஒப்பந்தம் செய்துள்ளனர்.

ஆனால் இலங்கை அரசு அதனை எள்ளளவும் கடைப்பிடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதே நேரம் விடுதலைப்புலிகள் சமாதான காலத்தில் வயது குறைந்த போராளிகளை வைத்திருக்கும் முகாம், புனர்வாழ்வு முகாம் என்பன அனைத்து நிறுவனங்களுக்கும் திறந்து விடப்பட்டன எனினும் சர்வதேசம் முட்டையில் ஏதோ பிடுங்குவது போன்று குறை கண்டு கொக்கரித்தமை தெரிந்ததே.

ஆனால் இலங்கை அரசின் இத்தகைய  மீறல்களை இதுவரை ஆக்கபூர்வமாக அணுகவில்லை சர்வதேச செஞ்சிலுவை சங்கம் கூட ஒரு தடவை தமது நிலபர அறிக்கையில் இந்த விடயத்தை தெரிவித்துவிட்டு அமைதியாக இருக்கின்றது.

இதே நேரம் அரசு தான் விரும்பிய ஒருவரை தமது ஏற்பாட்டில் வரவழைத்து  குறிப்பிட்ட ஒரு இடத்திற்கு அழைத்து சென்று இளம் போராளிகளை சந்திக்க வைத்திருப்பது அரசின்  திட்டமிட்ட  சதி நடவடிக்களின் ஒரு தொடராகவே பார்க்க முடியும்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.