எந்தவொரு தீர்மானமும் இல்லாத நிலையில் மீண்டும் நாளை சந்திப்பு: த.தே.கூ

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று இரண்டாவது தடவையாக கூடி ஆராய்ந்த போதிலும் எந்தவொரு தீர்மானமும் எடுக்காத நிலையில் நாளை மீண்டும் கூடி ஆராயவிருக்கின்றனர்.

கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று கூடிய போது 9 பேர் மட்டுமே சமூகமளித்திருந்ததாகவும் ஏனையோர் கொழும்பிற்கு வெளியே தங்கியிருப்பதால் கலந்துகொள்ளவில்லை என்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

tnaநேற்றிரவு எதிர்கட்சிகளின் பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகாவிற்கும் தனக்குமிடையில் இடம்பெற்ற சந்திப்பில் பேசப்பட்ட விடயங்கள் குறித்து இரா.சம்பந்தன் இன்றைய கூட்டத்தில் கலந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எடுத்துக் கூறியதாக தெரியவருகின்றது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தகவல்களின் படி தமது கட்சி சார்பில் வேட்பாளரொருவரை நிறுத்துவதற்கான வாயப்புகள் இல்லை என தெரிய வருகின்றது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.