வன்னியில் மனிதாபிமான நிலவரம் மிகவும் மோசமாகவுள்ளது – ச.செ.சங்க அதிகாரி

icrc_logo_inவன்னியில் மனிதாபிமான நிலவரம் மிகவும் மோசமாகவுள்ளதாகவும், தனது அனுபவத்தில் இவ்வாறான அனர்த்தத்தைக் காண்டதில்லை என சர்வதேச செஞ்சிலுவைச் சங்க அதிகாரி ஜாக்கியூஸ் டி மையோ தெரிவித்துள்ளார்.

 

வன்னியில் இடம்பெறும் மோதல்களினால் 150,000 பொதுமக்கள் சிக்கித் தவிப்பதாகவும் அவர்களைப் பாதுகாக்கவும் அவர்களுக்கு அத்தியாவசியத் தேவைகள் கிடைக்க வழிவகை செய்ய வேண்டியது அவசியம் எனவும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது.

 தற்போது அங்கு மனிதாபிமான நிலவரம் மிகவும் மோசமானது, இவ்வாறானதொரு அனர்த்தத்தைத் தாம் எங்குமே கண்டதில்லை எனவும் சர்வதேச செஞ்சிலுவை சங்கம் அதிகாரி சுட்டிக்காட்டியுள்ளார்.
மோதல்களின் காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் காட்டுப்பகுதியை நோக்கிச் சென்றுள்ளதாகவும் அவர்களுக்கு அங்கு உரிய பாதுகாப்பான தங்குமிட மற்றும் குடிநீர் வசதி போன்றவை இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.