இலங்கையில் உண்மையான சமாதானத்தை ஏற்படுத்த வேண்டுமானால் மனித உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும் ‐ நீல் பூனே
-
இவ் விடயம் 11. 12. 2009, (புதன்),
தமிழீழ நேரம் 14:41க்கு பதிவு செய்யப்பட்டது
- தாயக, இலங்கைச் செய்திகள்
இலங்கையில் உண்மையான சமாதானத்தை ஏற்படுத்த வேண்டுமானால் மனித உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் அமைப்பின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி நீல் பூனே தெரிவித்துள்ளார்.
பொது மக்களுக்கு தமது சமயம், இனம் தொடர்பான சுதந்திரம் மாத்திரமல்லாது உரிமைகளும் இருக்கின்றன.
அந்த உரிமைகள் ஏதேஒரு விதத்தில் அற்றுப் போகுமாயின் அந்த இடத்தில் அப்போது சமாதானம் இல்லாமல் போகும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐக்கிய நாடுகள் தகவல் மையம் மற்றும் இலங்கை மன்றக் கல்லூரி என்பன இணைந்து ஏற்பாடு செய்த மனித உரிமை தினக் கருத்தரங்கில் நேற்று கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இந்தக் கருத்தை வெளியிட்டிருந்தார்.