மாத்தளனில் எறிகணை தாக்குதலில் ஐ.சி.ஆர்.சி. பணியாளர் பலி

406_red-cross-manவன்னியில் நேற்று புதன்கிழமை மாலை இடம்பெற்ற ஆட்லறி தாக்குதலில் சர்வதேச செஞ்சிலுவைச் சங்க பணியாளர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். குறித்த பணியாளர் நேற்று மாலை படுகாயமடைந்த நோயாளிகளை மாத்தளன் மருத்துவமனையிலிருந்து ஐ.சி.ஆர்.சி. கப்பலுக்கு ஏற்றும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோதே எறிகணைத் தாக்குலுக்கு இவர் இலக்காகியுள்ளதாக ஐ.சி.ஆர்.சி. பேச்சாளர் சோபி ரொமேன்ஸ் தெரிவித்துள்ளார்.

யாழ். அளவெட்டியைச் சேர்ந்த கே. விஜயராசா என்பவரே இவ்வாறு பலியானவராவார். இவர் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தில் 1997ஆம் ஆண்டு முதல் பணியாற்றியுள்ளார். 2000ஆம் ஆண்டு தொடக்கம் குழுத் தலைவராக பதவியாற்றி வருகின்றார் என ஐ.சி.ஆர்.சியின் நடமாடும் அதிகாரி தெரிவித்துள்ளார்

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.