(காணொளி) துவாரகாவின் புகைப்படத்தில் உண்மை இல்லை: சீமான் திட்டவட்டமாக மறுப்பு – அந்தப் படம் பெண் போராளி இசைப்பிரியாவுடயது என அடையாளம் காணப்பட்டுள்ளது
-
இவ் விடயம் 18. 12. 2009, (புதன்),
தமிழீழ நேரம் 5:07க்கு பதிவு செய்யப்பட்டது
- காணொளி & ஒலி, தாயக, இலங்கைச் செய்திகள், முக்கிய செய்திகள் - மின்னஞ்சல், விசேட செய்தி
நேற்று முன் தினம் வெளியான தேசிய தலைவரின் மகள் இறந்து இருப்பது போன்ற படம், துவாரகாவினது அல்ல என நாம் தமிழர் இயக்கத்தின் தலைவரும் தமிழின உணர்வாளருமான சீமான் அவர்கள் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
சிங்களவர்கள் நடத்தும் ஒரு உளவியல் போர் இது எனக் குறிப்பிட்டுள்ள சீமான் அவர்கள், அப் புகைப்படத்தில் காணப்படுவது ஒரு பெண்போராளி எனவும் குறிப்பிட்டுள்ளார்.
சீமான் குமுதம் இணையதள தொலைக்காட்சி சேவைக்கு வழங்கிய நேர்காணல்
வன்னி வதைமுகாமில் இருந்து தற்போது திருகோணமலையில் வசித்துவரும் ஒருவரின் தகவலில் அடிப்படையில் இந்தப்
பெண்போராளி, இசைப்பிரியா என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் விடுதலைப்புலிகளின் நிதர்சனம் பிரிவின் மகளிர் பிரிவு போராளியும், போராளி கலைஞரும் செய்தி வாசிப்பாளரும் விடுதலை புலிகளின் கடற்படையின் தளபதியுமாக இருந்த சிறீராம் என்பவரின் துணைவியான இசைப்பிரியாவாக இருக்கலாம் என சில தவல்கள் தெரிவிக்கின்றன.