புலி முத்திரை குத்தப்படுகையில் வன்னி மக்கள் எவ்வாறு அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வருவது? – மனோ கணேசன் எம்.பி. கேள்வி

mono-200_27வன்னியிலுள்ள மக்களை அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வருமாறு அரசாங்கம் அழைப்பு விடுகின்ற அதேவேளை, அரசாங்கத்தின் பிரதான பங்காளிக் கட்சியான ஜாதிக ஹெல உறுமய அங்குள்ள மக்களை புலிகள், என முத்திரை குத்துகிறது. எனவே, வன்னியிலுள்ள மக்கள் எவ்வாறு அரசாங்கத்தின் பாதுகாப்பு வலயங்களுக்குள் வருவார்கள்?

என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் கேள்வி எழுப்பினார். தமிழ் அரசியல் தலைமைகளுக்கும், மக்களுக்கும் உபதேசம் செய்யும் சர்வதேசம் தமிழ் மக்களை கொன்று குவிப்பதை அமைதியாக பார்த்துக் கொண்டிருக்கிறது என்றும் அவர் மேலும் கூறினார்.

இத தொடர்பாக மனோ கணேசன் எம்.பி. மேலும் தெரிவிக்கையில், உலகுக்கே அஹிம்சையை போதித்த கௌதம புத்தரின் பெயரால் வெட்கமில்லாமல் கட்சி நடத்தும் இனவாத அடிப்படைவாதக் கட்சியான ஜாதிக ஹெல உறுமயவை தம்முடன் இணைத்துக் கொண்டுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் தமிழ் மக்கள் எவ்வாறு நம்பிக்கை வைப்பார்களென்பதை சர்வதேச சமூகம் புரிந்து கொள்ள வேண்டும்.

அதை விடுத்து தமிழ்த் தøலமைகளுக்கும் மக்களுக்கும் சர்வதேச சமூகம் உபதேசம் செய்து கொண்டிருப்பதால் தமிழர் இனச் சுத்திகரிப்பை தடுக்க முடியாது. அரசாங்கத்தின் அறிக்கைகளையும் செய்திகளையும் வரவேற்கும் சர்வதேசம், உண்மைகளை தெரிந்து கொள்வதில் அக்கறை காட்டாமை கவலையளிக்கிறது.

அரச பாதுகாப்பு வலயங்களுக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்படுகிறது. இதனை நம்பி தமிழ் மக்கள் எவ்வாறு வருவார்கள்?

அரசாங்கத்துடன் இணைந்துள்ள அரசியல் கட்சி வன்னி மக்களை புலிகளென்று முத்திரை குத்துவதன் மூலம் அம் மக்களை கொலை செய்வதற்கான அடித்தளத்தை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.