சிறீலங்கா செய்வது எல்லாம் நல்லதே – ரஷ்சியா

20090305_01aஆகாயமார்க்கமாக அனுராதபுரத்தில் இருந்து வவுனியாவுக்கு விசேடமாக அழைத்துச் செல்லப்பட்ட ரஷ்சிய, பிரான்ஸ் மற்றும் இந்தோனிசிய, ஜப்பானிய, கொரிய,மாலைதீவு தூதர்கள் வவுனியாவில் வன்னி மக்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ள முகாம்களைப் பார்வையிட்டு விட்டு அங்கு மக்களுக்கு செய்து கொடுக்கப்பட்டுள்ள வசதிகளைக் கண்டு பிரமித்துப் போனதுடன் அதற்காக சிங்களப் பேரினவாத அரசுக்கு புகழாரம் சூட்டி மகிழ்ந்திருக்கின்றனர். அதுமட்டுமன்றி..

ரஷ்சியா இன்னொரு படி மேலே போய் பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் வெற்றி பெற சிறீலங்காவுக்கு தொடர்ந்து உதவும் அதேவேளை போர் முடிந்த பின் சிறீலங்காவின் அபிவிருத்தியில் குறிப்பாக போரால் பாதிக்கப்பட்ட இடங்களில் தனது முதலீடுகளை ஊக்குவிக்கும் என்றும் கூறியுள்ளார்.

பிரான்ஸ் தூதுவரும் முகாம்களில் உள்ள வசதிகள் கண்டு திருப்தி கொண்டுள்ளாராம்.

மேலதிக புளுகுப் பெட்டகத்தை கீழே வாசியுங்கள்..

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.