அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற சிறிலங்கா அரசு மேற்கொண்ட போர் அவலங்களின் காட்சிப்படுத்தல் நிகழ்வு
-
இவ் விடயம் 25. 12. 2009, (புதன்),
தமிழீழ நேரம் 4:24க்கு பதிவு செய்யப்பட்டது
- புகைப்படங்கள், புலத்தமிழர் செய்திகள்
அவுஸ்திரேலியாவின் விக்ரோரிய மாநிலத்தில் அவுஸ்திரேலிய தமிழ் ஒற்றுமை நடுவத்தால் (Australia Tamil Solidarity) நடத்தப்பட்ட சிறிலங்கா நடத்திய போர் அவலங்களை காட்சிப்படுத்திய கவனயீர்ப்பு நிகழ்வு நேற்று புதன்கிழமை இடம்பெற்றது. தாயகத்தில் நடத்தப்பட்ட போரின் கொடுமைகளை வெளிக்காட்டும் ஒளிப்படங்களை காட்சிப்படுத்தியிருந்த இந்த நிகழ்வு 22 ஆம்திகதி மாலை 6 மணி முதல் 9 மணி வரை நடைபெற்றது.
அவுஸ்திரேலியாவின் பல்லின சமூகங்களை சேர்ந்தோர் ஆர்வத்துடன் காட்சிப்படுத்தல்களை பார்வையிட்டதை காணக்கூடியதாக இருந்தது.







