மன்னனாய் முடி சூட வர வேண்டும்..!!

இனிய புன்னகையுடன் எம்மோடு,,
இரண்டறக்கலந்த தானைத்தலைவனே…!!!

கம்பீர நடைக்கு சொந்தமான கரிகாலனே..!!
கண்ணான எங்கள் காவல் தலைவனே…!!

wall-annaமதியூக சக்கரவர்த்தியே…!!
மக்கள் மனங்களில் வாழ்ந்தது கொண்டிருக்கும்
மன்னாதி மன்னனே…!!

வல்லமையின் தோன்றலே…!!
வல்வெட்டித்துறையின் மைந்தனே…!!

தமிழீழ மக்களின் பொக்கிஷமே…!!
தமிழர்கள் போற்றும் தங்கத்தலைவனே..!!

சிங்களவனுக்கு பேரிடி கொடுத்த…முழக்கமே…!!
சிரிப்பிலே பதில் சொல்லிடும் செம்மலே..!!

தமிழனைத்தலை நிமிர வைத்த மறவனே…!!
தங்கத்தமிழீழ முதல்வனே..!!

தரணி எங்கும் உன் புகழ் ஒலிக்குதே…
தன்மானத்தமிழனே…!!
உன் நாமம் வாழுமே…என்றென்றும்..
உயிரிலே கலந்த தெய்வமே…!!

துரோகங்களை தாங்கிய அஞ்சா நெஞ்சனே..!!
துணிவினை ஊட்டி போராட,, வைத்த தெய்வமே..!!

வீரத்தின் புது இலக்கணமே…!!
விஷ்வரூபம் எடுத்து விரைவில் வர வேண்டும் ..!!

விதண்டாவாதம் பேசும் விஷக்கிருமிகளின் பேச்சினை அடக்க
விரைவாக வந்திட வேண்டும்..!!

மலர போகின்ற தமிழீழத்திற்கு,,
மன்னனாய் முடி சூட வர வேண்டும்..!!

சோழ பரம்பரை வழி வந்த தேசியத்தலைவா…!!
சோகம் நீக்கிட நீங்கள் வர வேண்டும்..!!

உங்களின் குரல் கேட்க.., ஊசலாடும் உயிரோடும்,
உணர்வோடும் காத்திருக்கும்,,
உங்கள் அன்பின் தழிழீழ மக்கள்….

- தமிழீழத்திலிருந்து ஒரு தமிழிச்சி

Copyright © 2004 - 2012 நெருடல். All rights reserved.