ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ‐ ஜெனரல் சரத் பொன்சேகா யாழ்ப்பாணத்திற்கு விஜயம்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அடுத்த மாதத்தில் யாழ்ப்பாணத்திற்கு விஜயமொன்றை மேற்கொள்ள உள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நோக்கில் இந்த விஜயம் அமையவுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

jaffnaஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பெரும்பாலும் ஜனவரி மாதம் 18ம் திகதி யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தை மேற்கொள்வார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
 
யாழ்பாணத்தின் சில பகுதிகளில் ஜனாதிபதி மஹிந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டங்கைள நடத்த உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
 
இதேவேளை, எதிர்க்கட்சிகளின் பொது ஜனாதிபதி வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகா ஜனவரி 2ம் திகதி யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
 
எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவும் சரத் பொன்சேகாவுடன் இணைந்து கொள்ள உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

Copyright © 2004 - 2012 நெருடல். All rights reserved.