சார்க் அமைப்பிலிருந்து இலங்கையை இடை நிறுத்த வேண்டும் : பிரிட்டிஷ் எம்.பிக்கள் வலியுறுத்து

britain-100_11இலங்கையில் போர்நிறுத்தம் ஒன்று ஏற்பட்டு சமாதானப் பேச்சுக்கள் மீண்டும் ஆரம்பமாகும் வரையில் அந்நாட்டை பொதுநலவாய அமைப்பில் இருந்து இடைநிறுத்த வேண்டும் என்று பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களின் தலைமையில் லண்டனில் பொதுநலவாய அமைப்பின் அலுவலகத்திற்கு முன்பாக நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போதே அவர்கள் இவ்வாறு வலியுறுத்தியதாக பி.பி.சி. செய்திச் சேவை தெரிவித்துள்ளது.

பொதுநலவாய அமைப்பின் அமைச்சர்கள் மட்டத்திலான செயலணிக் குழுவின் மாநாடு இலங்கையில் நடைபெற்ற நிலையில், இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

தமிழர்களுக்கான பிரித்தானிய அனைத்துக் கட்சி பாராளுமன்றக் குழு என்ற அமைப்பு ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்டத்தில், லண்டன்வாழ் தமிழர்கள் கலந்து கொண்டதாகவும் பி.பி.சி செய்தி சேவை மேலும் குறிப்பிட்டுள்ளது. தமது தொகுதி மக்களின் உறவினர்கள் இலங்கையில் இன்னல்களைச் சந்திப்பதனாலேயே அவர்களுக்காக குரல்கொடுக்கத் தாம் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டதாக பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் சிவோன் மக்டொனா கூறியதாக பிபிசி தெரிவித்துள்ளது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.