தம்பி டக்ளசுக்கு அருமை அண்ணனின் அன்பு மடல்

எப்படித் தம்பி இருக்கிறாய் ஒரே பிசி போல இருக்கிறது. என்ன தகிடுதத்தம் செய்தாவது மகிந்தனையும் சகோதரக் கம்பனிகளையும் வெல்ல வைத்துவிடலாம் என்று தலையால் நடந்து பார்க்கிறாய்? பாதையைத் திறக்கிறாய்? பாவப்பட்ட மக்களையெல்லாம் ஓடியோடிப் போய் பார்க்கிறாய்? வெள்ளம் போட்ட இடத்தில் கூட வேட்டியை மடிச்சுக் கட்டிக் கொண்டு போஸ் கொடுக்கிறாய்? மன்னாருக்குப் போறாய்? முருகண்டியிலும் நிற்கிறாய்? தாவி ஓடி வந்து கீரிமலையிலும் மிதக்கிறாய்.

என்ன இருந்தாலும் செஞ்சோற்றுக்கடன் அல்லவா? இந்த வாழ்க்கையை உனக்கு தந்தவரிற்காக அல்லும் பகலும் உழைக்கிறாய்? 

வன்னித் தமிழரிடையே அதிகம் உள்ளே போகாதே தம்பி அவர்களில் பலர் வீரத்தால் விளைந்தவர்கள். பண்டார வன்னியன் ரத்தம் ஊறியவர்கள். யாராவது பாய்ந்து கடித்து வைக்கப் போகிறார்கள். கழுத்தில் குத்துப்பட்ட அனுபவம் உனக்கு இருக்கிறது அல்லவா? கவனம் தம்பி.

இருந்தாலும் ஒண்டு சொல்லிறன் தம்பி! கவனமா கேட்டுக்கொள். மதில் மேலை இருக்கிற பூனை எந்தப் பக்கமும் தாவலாம். புரிஞ்சு கொள். நாளைக்கு உவன் பொன்சேகா வந்திட்டான் என்றால் உனக்கு பெரிய ஆப்பாக இறுக்கிப் போடுவான். வெற்றி வாய்ப்பும் அவனுக்கு கொஞ்சம் கூடப் போலை கிடக்கு. எதுக்கும் அடக்கி வாசிக்கிறது உனக்கு கொஞ்சம் நல்லதப்பா. ஒண்டு சொல்லிறன் கவனமா கேள். உன்ரை தாரக மந்திரத்தையே அழிச்சவன் மகிந்தா. முந்திப் பீலா விட்டாய் ஞாபகமிருக்கிதோ!

  • மத்தியில் கூட்டாட்சி
  • மாநிலத்தில் சுயாட்சி
  • எக்காலமும் பிரிக்க முடியாத வடக்கு கிழக்கு இணைந்த அலகு

உந்த மூண்டையும் அழிச்சவன் உவன்தானப்பா மகிந்தன். இப்ப சின்னத்தையும் இழந்து தாரக மந்திரத்தையும் இழந்து நிற்கிறாய். அவன் சரத் வந்தான் எண்டால் எத்தனை வீட்டுக்கு நீ வெள்ளை வான் அனுப்பியிருப்பாய் அது வந்து உன் வீட்டு வாசலிலை நிற்கும் மறந்திடாதை. 

என்னப்பா உன்ரை இணையத் தளங்கள் இப்ப அடக்கி வாசிக்கினம். எங்கள் தேசம் அப்டேற்றைக் ஒரு கிழமையா காணேல்லை. வெளிச்சம் ஒளி மங்கிப் போய் ஒருமாசமாயிட்டுது. என்ன தம்பி அஸ்தமனம் அவங்களுக்கு முன்னமே தெரிஞ்சிட்டுதோ! அவன் பிள்ளையான் பிழைக்கத் தெரிந்தவன் ரகசியமாய் பச்சைக் கட்சிக்கும் தூது விடுகிறானாம். 

என்னப்பா விளங்குதே. இல்லை மகிந்தாவைத்;தான் நாங்கள் வெல்ல வைப்பம் எண்ணடால் காதைக் கிட்ட கொண்டு வா ஒரு ரகசியம் சொல்லிறன். 

“நீயும் அவன் கருணாவுமா சேர்ந்து ஒரு அறிக்கை விடுங்கோ – நாங்கள் சரத்தை ஆதரிக்கிறம் எண்டு – உங்கள் மேலை கடுப்பாயிருக்கிற சனம் குழம்பிப்போய் மகிந்தாவுக்கு அள்ளிப் போட்டாலும் போடுங்கள். 

- யாழ்ப்பாணத்திருந்து அண்ணன் சனீஸ்வரன்

Copyright © 2004 - 2012 நெருடல். All rights reserved.