புரூஸ் பின் அமெரிக்க குற்றவியல் நீதிமன்றத்தில் செய்த வழக்கு பதிவுக்கு ஆதரவு – ப.உ வால்டர். பி. ஜோன்ஸ்

புரூஸ் பின் கோத்தபாய மற்றும் சரத்பொன்சேகாவுக்கு எதிராக அமெரிக்க குற்றவியல் நீதிமன்றத்தில் செய்த வழக்கு பதிவுக்கு அமெரிக்க காங்கிரஸ் கட்சியின் மூத்த ப.உ வால்டர். பி. ஜோன்ஸ் ஆரதவு தெரிவித்துள்ளார்.

இன அழிப்பு தொடர்பாக 1000 பக்கங்கள் அடங்கிய குற்றப்பத்திரிகையை கோத்தபாய மற்றும் சரத்பொன்சேகாவுக்கு எதிராக அமெரிக்காவின் முன்நாள் பிரதி சட்டமா அதிபர் புரூஸ் பின் தாக்கல் செய்துள்ளார்.

அமெரிக்க காங்கிரஸ் கட்சியின் மூத்த பாராளுமன்ற உறுப்பினர் வழக்கு பதிவை ஆதரித்தும், வழக்கு சரியான முறையில் விசாரிக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்து தற்போதைய சட்டமா அதிபருக்கு கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார்.

புரூஸ் பின் செய்துள்ள வழக்கு வெற்றிபெற்றால் கோத்தபாய மற்றும் சரத்பொன்சேகா இருவருக்குமான அமெரிக்க பிரஜைகள் உரிமை மறுக்கப்படும் மேலும் அவர்கள் மீது இனழிப்புக்கான குற்றத்திற்கான நடவடிக்கையும் எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.இதேவேளை சுடானின் அதிபர் ஒமார் அல் பஷீர்க்கு எதிராக மனித குலத்திற்கு எதிராக செயற்பட்டார் என்ற குற்றத்திற்காக அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் பிடியா ஆணை பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.