தேர்தல் கண்காணிப்பில் ஈடுபடுமாறு ஐ.நா விற்கு விடுக்கப்பட்ட கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது
-
இவ் விடயம் 07. 01. 2010, (திங்கள்),
தமிழீழ நேரம் 13:40க்கு பதிவு செய்யப்பட்டது
- தாயக, இலங்கைச் செய்திகள்
எதிர்வரும் 26ம் திகதி இலங்கையில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலை கண்காணிக்குமாறு ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கு விடுக்கப்பட்ட அழைப்பை அந்த அமைப்பு நிராகரித்துள்ளது.
நேரப் பிரச்சினை காரணமாக குறித்த காலப்பகுதில் தமது அதிகாரிகளை கண்காணிப்புப் பணிகளுக்காக அனுப்பி வைக்க முடியாது என ஐக்கிய நாடுகளின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
தேர்தல் கண்காணிப்பில் ஈடுபடுமாக தேர்தல் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்கவும், இலங்கை அரசாங்கமும் ஐக்கிய நாடுகள் அமைப்பிடம் கோரிக்கை விடுத்திருந்ததாக அமைப்பின் பேச்சாளர் மார்டீன் நெஸீர்கி குறிப்பிட்டுள்ளார்.
கடந்த பத்து வருடங்களாக உலகின் எந்தவொரு நாட்டில் நடைபெறும் தேர்தல்களையும் ஐக்கிய நாடுகள் அமைப்பு கண்காணிக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.