(காணொளி) இலங்கை படுகொலை ஒளிநாடா உண்மையானவை – ஐ.நா
-
இவ் விடயம் 08. 01. 2010, (புதன்),
தமிழீழ நேரம் 5:42க்கு பதிவு செய்யப்பட்டது
- தாயக, இலங்கைச் செய்திகள், முக்கிய செய்திகள் - மின்னஞ்சல், விசேட செய்தி
இலங்கை படையினர் சட்ட விரோதப் படுகொலைகளில் ஈடுபடுவது தொடர்பாகக் கடந்த ஓகஸ்ட்டில் வெளியான ஒளிநாடா காட்சிகள், உண்மையானவையே என்று ஐநாவின் விசேட அதிகாரி பிலிப் அல்ஸ்டன் இன்று தெரிவித்துள்ளார்.
ஓளிநாடாக் காட்சிகள் உண்மையானவை என்பது தெட்டத் தெளிவாகி விட்டது என்றும் அவர் அந்த ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்தார்.
சிங்கள இனவாதிகளால் தமிழர்கள் சுட்டுக் கொல்லப்படும் காணொளி காட்சி
மூன்று பக்கசார்பற்ற வல்லுநர்கள், இந்த ஒளிநாடா உண்மையானதுதான் என்று உறுதிப்படுத்தியுள்ளார்கள் என்றும், எனவே இலங்கை அரச படைகள் படுகொலை நடவடிக்கைகளில் ஈடுபட்டது நிரூபணமாகியிருக்கிறது என்றும், எனவே இது குறித்து ஒரு சுதந்திரமான விசாரணை நடாத்தப்பட வேண்டும் என்றும் மீண்டும் கோரியுள்ளார்.
இலங்கையின் ஜனநாயகத்திற்கான ஊடகவியலாளர்கள் என்ற அமைப்பு இந்த ஒளிப்படக் காட்சிகளை சணல் 4 உட்பட பல முக்கிய தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு கடந்த ஓகஸ்ட்டில் வழங்கியிருந்ததும் அவை ஒளிபரப்பான போது இலங்கை அரசாங்கம் அந்தக் காட்சிகள் புனையப்பட்ட காட்சிகள் என்று மறுப்புத் தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
இந்தக் காணொளி உண்மை தான் என்று பிலிப் அல்ஸ்டன் தெரிவித்ததற்க்கு பின்பு சேனல் 4 தொலைக்காட்சியில் ஒளிபரப்பான செய்தி