இதயத்தை வாட்டி வதைக்கும் துயரம்: பிரபாகரன் தந்தை மரணத்திற்கு வைகோ இரங்கல்
-
இவ் விடயம் 08. 01. 2010, (புதன்),
தமிழீழ நேரம் 5:56க்கு பதிவு செய்யப்பட்டது
- தாயக, இலங்கைச் செய்திகள்
விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனின் தந்தை வேலுப்பிள்ளை காலமானார் என்று இலங்கை ராணுவம் அறிவித்தது. இராணுவத்தின் கொடிய தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் அவர் நேற்று (06.011.2009) இரவு காலமானதாக இராணுவ தரப்பு அறிவித்தது.
பிரபாகரனின் தந்தை மறைவுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இரங்கல் தெரிவித்துள்ளார்.
’’பிரபாகரனின் பெற்றோர் போராளிகள் அல்ல. அவரது தந்தை வேலுப்பிள்ளை, இலங்கையின் வல்வெட்டித்துறையில் பிறந்து, தமிழ்ப் பண்பாட்டின் இலக்கணமாக வாழ்ந்தார். இந்த நிலையில், அவரது மறைவு இதயத்தை வாட்டி வதைக்கும் துயரமாக உள்ளது.
இலங்கைத் தீவில் லட்சக்கணக்கான தமிழர்களைக் கொன்று குவித்த ராஜபட்ச அரசு, வதை முகாம்களில் விசாரணை என்ற பெயரில் சித்திரவதை செய்து கொடுமைப்படுத்துகிறது.
மனித உரிமைகளைக் குழிதோண்டிப் புதைக்கிற சிங்கள அரசு இனியும் உலக நாடுகளை ஏமாற்ற முடியாது’’ என்று கூறியுள்ளார்.