பிரான்ஸ் மக்கள் பேரவையின் ஆறாத்துயர்

ஈழத்தமிழனத்தின்  சரித்திரம், தன்மானத்தமிழனின் இருப்பிடம், தன்னிகரில்லா தானைத்தலைவன் தம்பி பிரபாகரனை பெற்றெடுத்து, சீராட்டி, பேர்சூட்டி, தன்மான தமிழ் உணர்வூட்டி, உலகத்தமிழனை தலைநிமிரவைத்த உண்மை மைந்தனை இப்பூவுலகிற்கு தந்துவிட்டு, கயவர்களின் கயமையினால் உடலையும், தாய்மண்ணையும் விட்டு போய்விட்ட
எங்கள் மதிப்புக்குரிய திருவேங்கடம். வேலுப்பிள்ளை அவர்கள் பிரிவு எம்மை ஆறாத்துயரில் விட்டுள்ளது.

சிங்கள பேரினவாதம் தமிழினத்திற்கு காலாகாலம் செய்து வந்த கொடுமைகளை கண்டு கண்கலங்கினீர் ஐயா!

கையாலாகாத்தன்மையினால் தமிழர்கள் அன்று கைகட்டி நிற்ற கதையை கட்டிளம் காளை கரிகாலனுக்கு சொன்னீர் ஐயா!

புல்லில் நீர் மிதித்தாலும் புல்லுக்கூட உம்மை மதிக்கும் புனிதம் கொண்ட புண்ணியவான் நீர் ஐயா !

பண்பையும், நல்பழக்க வழக்கங்களையும், பண்பாட்டையும் கட்டிக்காத்து தன்வாழ்வில் பண்படுத்திய பண்பாளன் ஐயா!
பாவியவன் கோத்தபாயா ராஐபக்சாவின் குடும்ப கொடியபிடியிலே கொடுமைக்குள்ளாகி 86 வயதில் உயிர்நீத்த ஐயாவே!

நீங்கள் எங்கள் ஒட்டுமொத்த தமிழ் மக்களின் குடும்பத் தந்தை ஐயா!

எம் குலம் தளைக்க நீங்கள் கொடுத்த குலக்கொழுந்துகள் எத்தனை, அனுபவித்த கொடுமைகள், கண்ணீர், வேதனைகள், துன்பங்கள் எத்தனை!

துன்பத்தையும், துயரத்தையும், கண்ணீரையும், தந்தவர்கள் நிச்சயம் கழுவேற்றப்படுவான் அதுதான் நாங்கள் உங்களுக்கு தரும் சமர்ப்பணம்.

இவ்விடயம் பற்றிய உங்கள் கருத்தை எழுதுங்கள்

Copyright © 2004 - 2012 நெருடல். All rights reserved.