அமரர் வேலுப்பிள்ளை அவர்களுக்கு, அயர்லாந்து தமிழர் அமைப்பு விடுத்துள்ள இரங்கற் செய்தி

தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் தந்தையார் திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் மறைவையிட்டு அயர்லாந்து தமிழர் அமைப்பு தனது ஆழ்ந்த கவலையை தெரிவிக்கின்றது.
 
தமிழினத்தின் விடிவிற்காக தொடர்ந்து போராடிய ஒரு உன்னத தலைவரை தந்த அவருக்கு சிரம் தாழ்த்தி எமது வணக்கத்தை தெரிவித்துக் கொள்கின்றோம்.

தேசியத் தலைவரின் தந்தை, தாய் என்ற ஒரே குற்றத்துக்காகவே இலங்கை இராணுவத்தினால் கைது செய்யப்பட்டு, சர்வதேச நடைமுறைகளுக்கு மாறாக சிறைப்படுத்தப்பட்டிருந்தார். இந்நிலையில் உரிய மருத்துவ வசதிகளின்றி இலங்கை இராணுவத்தின் தடுப்புக்காவலில் சாவடைந்த செய்தி தமிழ்மக்கள் அனைவரையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.
 
அமரர் திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களது மறைவு உலகளாவிய தமிழ்மக்களை ஆறாத்துயரில் தள்ளியுள்ளது. அவரது மறைவால் வாடும் அவரது துணைவியார், பிள்ளைகள், மருமக்கள், உற்றார் உறவினர் எல்லோருக்கும் அயர்லாந்து தமிழர் அமைப்பு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.

Copyright © 2004 - 2012 நெருடல். All rights reserved.