கூட்டமைப்பு எம்.பிக்கள் சிறைச்சாலைக்கு விஜயம்

யாழ். சிறைச்சாலையில் உண்ணா விர தப் போராட்டம் மேற்கொண்டு வரும் அரசியல் கைதிகளை தமிழ்க் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, எஸ்.கஜேந்திரன் ஆகியோர் சந்தித்துப் பேசியுள்ளனர்.நேற்று யாழ். சிறைச்சாலைக்குச் சென்ற அவர்கள் கைதிகளின் நிலைமைகள் தொடர்பாக கேட்டறிந்தனர்.

இதேவேளை கைதிகளின் விடுதலை தொடர்பாக மாவை சேனாதிராஜா எம்.பி. நீதி அமைச்சர் மிலிந்த மொறகொடவுடன் நேற்றுப் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இச்சந்திப்பில் கைதிகளின் விடுதலை தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதியளித்துள்ளார்.இதேவேளை சிறைச்சாலை ஆணையாளர், மாவைசேனாதிராஜா எம்.பியுடன் கைதிகளின் நிலைதொடர்பாக கேட்டறிந்து கொண்டதாக தெரிவித்தார்.

Copyright © 2004 - 2012 நெருடல். All rights reserved.